ராமநாதபுரம், ஜூலை 14-
ராமநாதபுரம் மாவட்டம் அமமுக மாநில மகளிரணி செயலாளர் கவிதா சசிகுமார் அக் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கழகமான அதிமுகவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன். இவர் கட்சியில் பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்தவர். ஒரு முறை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் உடல்நிலை சரியில்லை என்றாலும் தவறாமல் கலந்து கொண்டு கட்சிக்காக பணி யாற்றியவர். இவரது மகன் தான் சசிகுமார். இவரும் அதிமுகவில் கட்சி பணியாற்றி பின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பின் டி.டி.வி. தினகரன் அணியில் சேர்ந்தார். இவருடன் இவரது மனைவி கவிதா சசிகுமாரும் டி.டி.வி அணியில் சேர்ந்து மாநில முகளிரணி பதவி வகித்து அங்கும் தனது சொந்த பணத்தில் கட்சி பணியை தீவிரமாக செய்து வந்தார்.

யார் இந்த கவிதா சசிக்குமார்

ராமநாதபுரம் நகராட்சியில் துணைத் தலைவராக பணியாற்றி மக்களின் அமோக ஆதரவை பெற்றவர். அடிக்கடி நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக குரல் கொடுத்தவர். இவரது முயற்சியால் தெரு விளக்குகள், தெரு குடிநீர் குழாய்கள், சாலைகள், சுகாதார பணிகள் பல நடந்துள்ளன. இந் நிலையில் அப்போது நகராட்சி தலைவராக இருந்த எஸ்.கே.ஜி.சேகர் இறந்த பின் கவிதா சசிகுமார் தலைவர் பொறுப்புக்கு வந்தார். தலைவரான பின்பு பாதாள சாக்கடை பணியை துரித படுத்தியும், நகராட்சியில் அடிப்படை வசதிகளை துரிதமாக செய்வதற்கும் வித்திட்டவர் கவிதா சசிகுமார்.
இவரது கணவர் சசிகுமார் நமது மண்ணின் மைந்தரான அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் சகோதரர் ஆவார்.

அமைச்சரின் முயற்சியால் அதிமுகவில் இணைப்பு:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் தாய் கழகத்திற்கு திரும்ப தொடங்கி விட்டனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அமமுக மாநில மகளிரணி செயலாளர் கவிதா சசிகுமார் அமைச்சர் மணிகண்டன் முயற்சியால் சென்னையில்  கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான .எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அமமுக மகளிர் இணை செயலாளர் கவிதா சசிகுமார்  தன் கணவர் சசிகுமாருடன் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். உடன் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம். மணிகண்டன் இருந்தார். முன்னதாக தமிழகத்தின் துணை முதல்வரும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை கவிதா சசிகுமார் மற்றும் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here