விமான கண்காட்சியில் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்
பெங்களூரு:
பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின. கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலானது. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த விபத்துக்கான தொடர்பாக உயரதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு இந்திய...
குஜ்ஜார் இன மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு- ராஜஸ்தான் சட்டசபையில் மசோதா தாக்கலானது
ஜெய்பூர்:
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்...
உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை:
விபத்து, உடல்நலக் குறைவால் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் தீயணைப்பு நிலைய டிரைவர் வேம்பு, முசிறி தீயணைப்பு நிலைய வீரர் சீனிவாசன், மற்றும் நிலைய அலுவலர் இளங்கோவன்,...
இது புதிய இந்தியா என்பதை பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் – மோடி ஆவேசம்
லக்னோ:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியான நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானை மிகவும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
‘புல்வாமா தாக்குதலில் தங்களது...
ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது செல்லும்: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு
புதுடெல்லி:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர்...
புல்வாமாவில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதா? -மோடி மீது மம்தா பாய்ச்சல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என...
கேரளாவில் ஐஏஎஸ் தேர்வில் வென்ற முதல் பழங்குடி இன பெண்ணுடன் மதிய உணவு சாப்பிட்டு பாராட்டுத் தெரிவித்த ராகுல்...
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா குடும்பத்தாருடன் மதிய உணவு சாப்பிட்டு அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
சமீபத்தில் 2018-ம் ஆண்டு நடைப் பெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை...
8-வது நாளாக எல்லைப்பகுதிகளில் பாக்.படைகள் துப்பாக்கிச் சூடு – கிராம மக்கள் காயம்
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ்தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தினர். எல்லை கட்டுப்பாட்டு கோடுப்பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி செக்டாரில்...
சபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
ஆனால் காலம் காலமாக...
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி:
புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரை நேரில் வரவழைத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை...

















