பெரியபாளையம், ஏப். 16 –
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6. இடங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பிரமாண்மான மேடை அமைத்து கொண்டாடப்பட்டது
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131.வது பிறந்த நளை முன்னிட்டு எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, தண்டலம். பெரியபாளையம். சூளைமேனி. பாலவாக்கம். கண்ணிகைபேர் உள்ளிட்ட 6 இடங்களில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தளபதி அருள் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் அறிவுச்செல்வன் ஏற்பாட்டில் சூளைமேனி பகுதியில் வைக்கப்பட்ட பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் அம்பேத்கர் திருவுருப்படம் வைக்கப்பட்டிருந்தது.
அத்திருவருவப் படத்திற்கு இந்நிகழ்வில் பங்கேற்ற கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி சமத்துவநாள் உறுதி மொழியேற்றனர். பின்னர் இனிப்புகளை வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி, ராமமூர்த்தி, ரவிக்குமார், லோகேஷ், சுமன், மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் வித்யாலக்ஷ்மி வேதகிரி, சூளை மேனி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி காளிதாஸ், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள். தண்டலம் தமிழ்செல்வன். கவிஞர்.ஜிவா, பிரசாந்த், கவியரசன், நவீன், நாகராஜ், தென்னரசு, முருகேஷ் வினோத் ராமமூர்த்தி உள்ளிட்டவர்களும் திரளான பொதுமக்களும் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.





















