சென்னை, அக். 5 –
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அக் 5 -2021 ல் தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அம்மனுக்கள் மீதான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.



















