பொன்னேரி, மே. 28 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 19.44 லட்ச செலவில் விநாயகர் கோவில் தெருவில் புதிய புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் பணி நிறைவுப் பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக அச்சாலை திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழா ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையிலும், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர், உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்து பங்கேற்ற பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் முழுமையாக பணி நிறைவுப்பெற்ற அப்புதிய சிமெண்ட் சாலையை ரிப்பன் வெட்டி அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்,
மேலும் இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் வல்லூர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், ராமதாஸ், கலாநிதி, ராஜா, கலைமணி ஜோதி, மாரியப்பன், சந்திரசேகர், பாலு, சுரேந்தர், மேலூர் ஸ்டாலின், உள்ளிட்டவர்களும், அக்கிராம பொதுமக்களென திரளானவர்கள் பங்கேற்றனர்.


















