காஞ்சிபுரம், ஜன. 5 –
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெளியிட்டார்
குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில், 55 வாக்கு சாவடிகளும், மாங்காடு நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 44 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 34 ஆண்கள் வாக்குசாவடிகளும், 34 பெண் வாக்காளர்கள் வாக்குசாவடிகளும் 29 அனைத்து வாக்காளர்கள் வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1.95.414, பெண் வாக்காளர்கள் 2.00.488 இதர வாக்காளர்கள் 52, ஸ்ரீபெருமந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1.80.001, பெண் வாக்காளர்கள் 1.90.427, இதர வாக்காளர்கள் 62 உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1.29.093, பெண் வாக்காளர்கள் 1.38.923 இதர வாக்காளர்கள் 46
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் 1.52.252, பெண் வாக்காளர்கள் 1.63.158 இதர வாக்காளர்கள் 17 காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியில் 6.56.760 ஆண் வாக்காளர்களும், 6.92.996 பெண் வாக்காளர்களும் 177 இதர வாக்காளர்களும் மொத்தம் 13.49.933 பேர் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது
இந்த வாக்காளர்கள் பட்டியல் வெளியிட்டின் போது திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.





















