பூண்டி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் அப்பகுதி மக்கள் வெகு காலமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் மெய்யூர் வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்து முறையாக இயக்கபடாததால் பள்ளி கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதனால் வேலைக்கு செல்லும் பலரின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். அப்பிரச்சினைகள் குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அப்புகார்களுக்கு அதிகாரிகள் செவி சாய்காததால் எவ்வித நடவடிக்கைகளையும் இந்நாள்வரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லு அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் தீடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அத்தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் க்கிராம மக்களிடம் சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு உயர் அதிகாரிகளிடம் அம்மக்கள் பிரச்சினைக் குறித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறிய உறுதி மொழியினை ஏற்று தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். அப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.





















