கும்பகோணம், மே. 28 –
. கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை அடுத்துள்ள நரசிங்கம்பேட்டை அக்ரஹாரத் தெருவில், வசித்து வரும் மகாலிங்கம் மகன் தனபால் என்கிற ஐயப்பன். மேலும் இவர் அப்பகுதியில் கட்டட கட்டுமான பணி செய்து வருகின்றார்.
திருமண்மான ஐயப்பனுக்கு, ஒரு மகள் உள்ளார். மேலும் இவருக்கு பிறவியிலேயே ஒரு கை முழுமையான அளவிலும், இடது கை சற்று குட்டையாகவும் இருக்கும் மாற்றுத்திறனாளியாவார்.
இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டிலிருந்து நர்சிங்கன்பேட்டை மெயின் ரோட்டின் எதிரே உள்ள டீக்கடையில் நின்று டீ குடித்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தனபால் என்கிற ஐயப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதோடு கத்தியாலும் குத்திவுள்ளனர். இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனபால் என்கிற ஐயப்பன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலயறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குற்றவாளியை கைது செய்யாமல் பிரேதத்தை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.





















