கும்பகோணம், அக். 21 –
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டினர்.
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துத் தெருவில் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என மதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு இருந்த காரணத்தினால்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தலைமை கழகச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நகர கழக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
மாவட்ட துணை செயலாளர் சரவணன் நகர செயலாளர் கேபிள் செந்தில் பொதுக்குழு உறுப்பினர் மாறன் மாவட்ட பிரதிநிதிகள் கிரி முருகன் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் தாமோதரன் மாணவர் அணி நகர துணை செயலாளர் முரளி நகர இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்கள்.