போரூர், ஏப். 02 –

சென்னை அருகே உள்ள போரூர் சிக்னல் பகுதியில் அரசு மது கடையுடன் கூடிய  மதுபான கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளராக ராமநாதன் என்பவர் உள்ளார். மேலும் இம்மதுபான கூடத்தில் காலை, இரவு நேரங்களில் சட்ட விரோத மது விற்பனையாகி வருவதாக தொடர்ந்து புகார் வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அப்பாரில் .விடியற்காலை 5  மணி முதலே  சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடந்து வரும் வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அப்பாரில் மது பாட்டில் ஒன்றுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. என்றவாறும் தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் இச்சட்ட விரோத மதுபான விற்பனையால் காலையில் அப்பகுதியை கடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மற்றும் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள், முதியவர்கள் என பெரும்பாலனவர்கள் பெருத்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் இயங்கும் இப்பார் வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதெனவும், மேலும் இச்சட்டவிரோத மதுபான விற்பனை அக்காவல் நிலைய காவல்துறையினருக்கு தெரிந்தே நடைப்பெறுவதாக மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுப்போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை இரும்புகரம் கொண்டு அரசு தடுத்திட வேண்டுமெனவும் அவர்கள் அரசுக்கும் அதுத் தொடர்பான துறை நிர்வாகத்திற்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here