பொன்னேரி, ஆக. 03 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் ரூ.54.40 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வருகிறது.
மேலும் இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், அதனால் அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், குற்றாட்டு எழுப்பினார்கள். எனவே அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வ.ழு. பிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் துலுக்காணம் மோகன் சமூக நீதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மாசிலாமணி, மாவட்ட தலைவர் சு.வே.ரவி, இளைஞர் அணி செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.





















