செங்கல்பட்டு, ஏப். 21 –

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டினை தவிர்த்திட வலியுறுத்திய விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இப்போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக இம்மாவட்டத்தை நெகிழியில்லா மாவட்டமாக உருவாக்குவோம் என்ற உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஏற்றனர்.

மேலும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அப் பயன்பட்டினை தவிர்த்திடும் வகையிலும் மேலும் அதனை அடியோடு தடுத்திடும் நோக்கிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு  மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சை பை என்ற திட்டத்தினை முன்னெடுத்து பொதுமக்கள் அனைவரும் துணிப்பையினை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், நெகிழியில்லா மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற உணர்வோடு சுற்றுச்சூழல் பாதுகாத்தல் அனைவரின் கடமை என்றவாறு, விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி நீதிமன்றம், வேண்பாக்கம், வேதநாராயணபுரம் ஆகிய நகரின் முக்கிய வழியாக மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நிறைவு செய்தனர். மேலும் இம்மினி மாரத்தான் விழிப்புணர்வுப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

மேலும் இம்மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here