திருவள்ளூர், மார்ச்.26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அம் முகாமையில் தலைமை மருத்துவர் திருக்குமரன் கலந்துக் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். மேலும் அம் முகாமில் முன்னாள் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள்.

வழி மாறிடாமல் சமூதாய அக்கறையுடன் நல்வழியில் செயல்படும் விதமாக பல உயிர்களை காப்பாற்ற உதவிடும் வகையில் முன்னாள் மாணவர்கள் செய்த அச் செயலை கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவர்களுக்கு வெகுவாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here