ஜெய்ப்பூர்:
பாஜக தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.
‘எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையும்.
பாஜக தோல்வியினால் துவண்டு விடாது, வெற்றியால் மமதையும் கொள்ளாது. மக்களுக்கு சேவை செய்வதற்காகதான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம்.
மோடியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மாபெரும் கூட்டணியின் முழக்கமாக உள்ளது. இந்த கூட்டணியின் தலைவர் என்பதை ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதலில் பலியான நமது வீரர்களின் தியாகம் விரயமாகப்போக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புல்வாமா தாக்குதலில்அனுமதிக்காது. நமது ராணுவம் இதற்கு சரியான பதிலடியை கொடுத்தே தீரும்’ என இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.