சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்லும்போது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுங்கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் தற்போது விளையாடும் வீரர்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு மைதானத்தில் விளையாடும்போது எந்தநாட்டு வீரர்கள் சாதனை புரிந்தாலும் அவர்களது புகைப்படங்கள் அங்கு வைக்கப்படும். அந்த வகையில் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் இம்ரான் கான் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப்படம் தற்போது மூடப்பட்டுள்ளது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி மைதானத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர்களின் போட்டோக்களும் நீக்கப்பட்டனது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருத்தம் அடைந்துள்ளது.

கிரிக்கெட் வேறு, அரசியல் வேறு என்று கூறும் பாகிஸ்தான், அடுத்த மாதம் துபாயில் ஐசிசி கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்தியாவிடம் இந்த சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here