கும்மிடிப்பூண்டி, மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு, கே.ஆர். பக்தவச்சலம் தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (57). மேலும் அவர் சென்னை கார்ப்பரேஷனில் அரசு செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு மூத்த மகள் ஜெய்ஸ்ரீ (28), இளைய மகள் அக்ஷயா (26) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் ஹரிதாஸ் உயிரிழந்தார்.

இந்நிலையில் திருமணமான அவரது மூத்த மகள் ஜெய்ஸ்ரீ குடும்பத்தினருடன் இணைந்து ராஜேஸ்வரி மற்றும் அவரது இளைய மகள் அக்ஷயா ஆகியோர் கடந்த ஆறாம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் இரும்பு கிரில் கதவை உடைத்து, வீட்டின் உள்ளே சென்று மரக்கதவை கூர்மையான ஆயுதத்தால் உடைத்துள்ளனர். தொடர்ந்து வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து நகை பெட்டியில் இருந்த 30 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரொக்க பணம், 80 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர்தர செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீடு திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி தலைமையிலான போலீசார் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணையில் ஈடுபபட்டு வருகின்றனர்.

மேலும் கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை குறிவைத்து அரங்கேறும் திருட்டு சம்பவங்களால் குடியிருப்பு வாசிகள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here