இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை; ஜூலை, 10-
இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பாக நடக்கவிருக்கும் மானியக் கோரிக்கை மீதான உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்பு அத்துறை அமைச்சர் டாக்டர் .எம்.மணிகண்டன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு துறைச் சார்ந்த அறிவிப்புகளை வாசிக்க இருக்கிறார். இந் நிலையில் இன்று காலை அக்கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளரும் காலஞ்சென்ற முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் வணங்கி சட்டமன்ற பேரவைக்குச் சென்ற அமைச்சர் முதல்வர் எடப்படி அவர்களிடம் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். பின்பு மரியாதை நிமித்தமாக துணை முதல்வரிடமும் பூங்கொத்தினை அளித்து அவர்களது வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார் .