அம்பத்தூர், ஆக. 10 –
சென்னை அடுத்துள்ள அம்பத்தூரில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பவள விழா பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பத்தூர் ஒரகடத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு, அம்பத்தூர் OT , வடக்கு பூங்கா சாலை வழியாக அம்பத்தூர் மார்க்கெட் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதயாத்திரை நடைபெற்றது.
இரண்டாவது நாளான இன்று கொரட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி கொரட்டூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி நடைபயணத்தை துவக்கி வைத்தார். இப்பாதயத்திரை ரயில் நிலையம் சாலை, ராதா திரையரங்கம் சாலை, வழியாக சுமார் எட்டு கி.மீ தூரம் கடந்து சென்று பாடி காந்தி சிலையில் முடிவடைந்தது.
தொடர்ந்து, செய்தியாளருக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் செல்வம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை மேற்கோள் காட்டி பேசினார்.
மேலும் இந்நிகழ்வில் மாநில இளைஞரணி பொது செயலாளர் மன்சூர் சுபான், மோகன்ரங்கம், மோகன் குமார், பி.டி.ரோமியோ லோகபிரான், பச்சையப்பன், மாமன்ற உறுப்பினர் பானுப்பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
பேட்டி காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் செல்வம்