திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய ரயில்கள் 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது.
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் பேசஞ்சர் ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது திருவள்ளூர் அருகே செஞ்சிபனம்பாக்கம் மற்றும் கடம்பத்தூர் இடையே வந்து கொண்டிருந்த போது கார்டு கடைசி பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை வந்துள்ளது.
அதனைக் கண்ட கார்டு (Guard) உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் அளித்து பேசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. பெட்டியில் இருந்த பயணிகள் புகை வருவதை கண்டு அலறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
இந்நிலையில், கார்டு (Guard) இறங்கி வந்து பார்த்த போது கடைசி பெட்டியின் அடியில் புகை வருவதை கண்டு ரயிலில் உள்ளே எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அனைத்து பெட்டியிலும் அணைக்கப்பட்டது
அதனால் அரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கமாக செல்லும் வேகத்தை விட பேசஞ்சர் ரயில் வேகம் குறைத்து மெதுவாக இயக்கப்பட்டு சென்றது. அதனிடையே பதற்றமான பயணிகள் பேசஞ்சர் கார்டு தெரிவித்ததையடுத்து மீண்டும் ரயிலுக்குள் ஏறி பயணித்தனர்.
அச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது பிரேக் ஓயிண்டிங் பாக்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சக்கரம் சுற்றாமல் நின்று விடும் எனவும் அதனால் சக்கரத்திற்கும் பிரேக்கிற்கும் உராய்வு ஏற்பட்டு ஏற்பட்டுள்ள புகை தான் எனவும் அதை சரி செய்து விடலாம் எனவும் தற்போது மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். அதன் காரணமாக பேசஞ்சர் ரயில் பின்னால் வந்த அடுத்த புறநகர் ரயில்கள் அனைத்தும் 20 நிமிடம் காலதாமதமாகச் சென்றன…





















