சென்னை, சனவரி. 30 –
திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நாகராஜன் என்பவர் தனது தாயார் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கடந்த வாரம் 20.01.2024 அன்று சென்னை திநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் நாகராஜனின் தாயார் கனகவல்லி அன்று காலை அப்பகுதியில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்றவர் வழிமாறி வீடு திரும்பவில்லை, வெகு நேரமாக அவர் வீடு திரும்பாததால், ப்பகுதியில் உள்ள பல இடங்களில் தேடிப்பார்த்தும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் இடம் கேட்டறிந்தும் அவரிடம் இருப்பிடம் தெரியாததால், அதுக்குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையமான திநகர் பாண்டி பஜார் சௌந்தரபாண்டியன் அங்காடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டது.
அதன் பிறகு நாகராஜனின் தாயார் கனகவல்லி அவர்கள் புகைப்படத்துடன் கூடிய காணவில்லை சுவரொட்டிகள்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டும், அச்சடித்த துண்டு காகிதங்கள் நகர் முழுவதும் அனைத்து இடங்களில் கொடுக்கப்பட்டு தேடி வந்த நிலையில், நேற்று 29.01.2024 அன்று காலை வெப்பேரி கமிஷனர் அலுவலகத்திலிருந்து காவல் கரங்கள் மூலம் செய்தியாளர் நாகராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
உடனடியாக அங்கு சென்ற காணாமல் போன திருவாரூர் மாவட்டத்தின் தனியார் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் கே.நாகராஜன் அரசவனங்காடு என்ற முகவரி மற்றும் தாயார் கனகவள்ளி பற்றிய முழு தகவல்களை காவல் கரங்கள் குழுவின் காவல் ஆய்வாளர் திருமதி மேரி ராஜூ முழு விவரங்களையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து உயிர் ஒளி காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த கனகவல்லி அம்மையாரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் இவர் தானா என அடையாளம் கேட்டறிந்த பிறகு நேரடியாக சென்று அழைத்து வந்து கனகவல்லித்தாயாரின் மகன் நாகராஜ் யிடம் ஒப்படைத்தனர்.
அத்துடன் கனகவல்லி அம்மையாருக்கு இரண்டு புடவை ஒரு போர்வை வைத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திநகர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கொடுக்க பட்ட முதல் தகவல் அறிக்கைபடி அம்மா கிடைத்து விட்டார் என்ற தகவலையும் அக்காவல் நிலையத்தில் தெரிவித்து அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.
மேலும் கனவல்லி அம்மையாரை தேடிக் கண்டுப்பிடித்து கொடுத்த மற்றும் அதற்கு உறுதுணையாகயிருந்த *காவல்கரங்கள்* குழுவினர் *உயிர்ஒளி* காப்பகத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் AC பசுபதி, Inspector மேரிராஜூ, Sub-inspector புனிதா, மற்றும் பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் துணை காவல் ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட பாதுகாப்பாக வைத்திருந்து வழியனுப்பி வைத்த அதிகாரிகள் குழுவினர் மேலும் தன்னை சார்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்..




















