கபிஸ்தலம், மார்ச். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில் தேவகி பயர் வொர்க்ஸ் என்கிற பெயரில் சண்முகம் என்பவர் வெடிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சோழங்கநத்தத்தில் உள்ள அவரது வீட்டில் அனுமதி இன்றி வெடி  தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சண்முகம் வீட்டினை சோதனை செய்தனர். அப்போது

வெடிப்பொருடகள் தயாரிக்கப் பயன்படும் அலுமினிய பவுடர் 2 kg, சல்பர் -2kg, பொட்டாசியம் நைட்ரேட் 6 kg உள்ளிட்ட வெடிபொருள்களின் மூலப்பொருட்கள் இருப்பதை அப்போது அவர்கள் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து அம் மூலப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் வீட்டில் வெடி தயார் செய்து கொண்டிருந்த தமிழ்வாணன் (29) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here