திருவண்ணாமலை, ஜன. 14 –
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் அனைத்து திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25.57 கோடி மதிப்பீட்டில் 3600 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கநாணயம் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.44.92 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட
உதவிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் அனைத்து திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25.57 கோடி மதிப்பீட்டில் 3600 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கநாணயம் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.44.92 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் நேற்று (13.01.2022) வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் அனைத்து திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் 1319 பட்டம் படித்த பயனாளிகளுக்கும், ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் 2281 பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு படித்த பயனாளிகளுக்கும், ஒரு பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 3600 பயனாளிகளுக்கு ரூ.13.27 கோடி மதிப்பீட்டில் தங்க நாணயமும் என மொத்தம் ரூ.25.57 கோடி மதிப்பீட்டில் நிதியுதவிகளையும்,
இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூ.4.58 இலட்சம் மதிப்பீட்டில் 458 பெண் பணியாளர்களுக்கும் ரூ.2.12 இலட்சம் மதிப்பீட்டில் 163 ஆண் பணியாளர்களுக்கும், ரூ.9.73 இலட்சம் மதிப்பீட்டில் 885 அர்ச்சகர்களுக்கும் என மொத்தம் ரூ.16.43 இலட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார்.
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.76,500 வீதம் ரூ.3.82 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,75,000 வீதம் ரூ.19.25 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால்களும்;, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,74,500 வீதம் ரூ.3.49 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.23,500 வீதம் ரூ.47,000 மதிப்பீட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால்களும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,000 மதிப்பீட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால்களும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78750 மதிப்பீட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால்களும், என மொத்தம் ரூ.28.49 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் ரூ.26.02 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், அருள்மிகு அண்ணாமலையார் திருகோயில் இணை ஆணையர் – செயல் அலுவலர் கே.பி.அசோக்குமார், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் (மு.கூ.பொ) திருமதி.பூ.மீனாம்பிகை, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி. பார்வதி சீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.ரா.பாரதி ராமஜெயம், ஒன்றிய குழுத்தலைவர்கள் திருமதி.கலைவாணி கலைமணி (திருவண்ணாமலை), திருமதி.கலையரசி ராஜசேகரன் (கலசபாக்கம்), திருமதி.பரிமளா கலையரசன் (தண்டராம்பட்டு), திருவண்ணாமலை ஒன்றியக்குழு துணைத்தலைவர் த.ரமணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன், வேங்கிக்கால் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.சாந்தி தமிழ்ச்செல்வன், துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொணடனர்.