திருவள்ளூர், பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1600 க்கும் மேற்றபட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பயனாளிகளுக்கு இலவசப் பட்டாவினை வழங்கினார்.
திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி வளாக கலை அரங்கத்தில் திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சார்ந்த சுமார் 1600 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியிர் த.பிரபு சங்கர் தலைமைமயில் நடைப்பெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகைத்தந்த தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது அமைச்சர் தெரிவிக்கும் போது, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாகவும், அவ் வகையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் 100 இடங்களில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ஏழை எளிய மக்கள் வசிக்கும் திருவள்ளுர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சார்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.. எனவும், அதன் அடிப்படையில் திருவள்ளுர் மருத்துவ கல்லூரி அரங்கத்தில் 1600 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்போது அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார்.
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.























