தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவும், சிறு குறு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்திரமேரூரில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி இவ்வாறு உரையாற்றினார்.

உத்திரமேரூர், மே. 18 –

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 17-12-2022 அன்று மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

929 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 760 மனுக்களுக்கு 10 கோடியே 51 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, குடும்ப அட்டை, சலவைப்பெட்டி, தையல் இயந்திரம், சிறு தொழில் கடன் என பல்வேறு உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன்,

திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தமிழக மக்களுக்காக உழைத்து வருகின்றார் என்றும், இதற்கு முன்பு இருந்த முதல்வர் ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே கோட்டைக்கு வருவார், அதுவே நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வரும் என்றும்,

தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது அதில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என பேசினார்.

விழாவில் உத்திரமேரூர்  சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here