குடவாசல், மே. 18 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள மெயின் சாலையில் சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர் மூப்பு வயது தம்பதியினரான நாராயணன் குடும்பத்தினர்.
இந்நிலையில் அவர்களுக்குப் பாத்தியப்பட்ட மனை எண் 36/1 ல் நாராயணன் என்பவரின் தந்தையார் வைத்து வளர்த்த மரம் ஒன்று இருந்தது. அந்த இடத்தில் தனது குடும்ப வருமானம் கருதி அங்கு கடைக் கட்டுவதற்காக திட்டம் வகுத்து சென்ற வாரம் அவர்களுக்கான சொந்த இடத்தில் தாங்கள் வளர்த்த மரத்தை வெட்டியுள்ளார்.
அக்காட்சியை ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் ஊராட்சி மன்ற எழுதரும் சேர்ந்து வெட்டிய மரத்தினை போட்டோ எடுத்து வலைதளங்களில் பரவ விட்டும் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியும் உள்ளனர். மேலும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி அங்கு வந்த அதிகாரிகளும் இருவரையும் காவல்துறை மூலம் கைது செய்ய வைப்போம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் நாராயணனும் அவருடைய மனைவியாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மன வேதனையில் உள்ளனர். அதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலரை நேரடியாக வந்து அந்த இடத்தை அளந்த போது அந்த மரம் அவருடைய இடத்திற்கு உள்ளாகவே உள்ளது என தற்போது தெரிய வருகிறது.
அதுக்குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் மூப்பு தம்பதியினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதின் நோக்கம் ஒன்று அவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களிடம் பணம் பறிக்க அரசு அலுவலர்களை சேர்த்துக் கொண்டு திட்டமிட்டுயிருக்க வேண்டும். இல்லையேல் முன் பகைக் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கின்றனர். எது எப்படியாயினும் உண்மை தகவல் அறியாது அரசு பொறுப்பு வகிக்கும் அலுவலர்களின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கதெனவும்,
இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் வாங்கித்தருமாறு நடந்துக் கொண்ட அவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வியாளர்கள் சமூகார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். அப்போதுதான் அரசு அலுவலர்களின் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தும் அலுவலர்களுக்கு பாடமாக இருக்கும் என்கின்றனர்.




















