ஊத்துக்கோட்டை, மார்ச். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி  சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் வாகனத்தின் பின்புறமாக மணல் லாரி மோதியதில் ஊத்துக்கோட்டை பகுதியை சார்ந்த ஏலக்ட்ரிஷியன்  குணசேகரன் (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அப்பகுதிமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.மேலும் அவ்விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேறகொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மண் குவாரியில் இருந்து அதி வேகத்தில் சென்ற லாரியால் உயிரிழந்த குடும்பத்திற்கு குவாரி நிர்வாகம் ஆறுதல் மற்றும் இழப்பீடும் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுப்பி உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்ட பின்பும் தொடர்ந்து மண் குவாரிக்கு சென்று வரும் மணல் லாரிகள் தொடர்ந்து அதிவேகத்துடன் மீண்டும் அப்பகுதியில் வருவதால் ஆத்திரமடைந்த  அக்கிராம மக்கள் தொம்பரம்பேடு பகுதியில் கிருஷ்ணா கால்வாய் மீது சென்ற மண் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனிடயே மண் குவாரியை சார்ந்த நபர்கள், மக்கள் வருவதை கண்டு இட்டாச்சி  ஜேசிபி வாகங்களை மறைத்து வைத்து விட்டு தலைமறைவாகி உள்ளனர். எனினும் கிராம மக்கள், மற்றும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அச்சம்பவம் தாமாரைகுப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இவ்வளவு போராட்டம் நடைபெற்றும் வருவாய் துறைனார், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுக் கொள்ளாமல் இருப்பது குவாரி நடத்துவோரிடம் லட்சகணக்கில் லஞ்சம் வாகியதாகவும் அதனால்தான் அரசு அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here