திருவண்ணாமலை, செப்.13-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்திற் குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சியில் தனது தொகுதி மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பெ.சு.தி. சரவணன் எமஎல்ஏ தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் தனது தொகுதி மக்களுக்காக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.
இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
முகாமில் கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணி, தாசில்தார் ஆர்.ஜெகதீசன், ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், பிரசன்னா, ஊராட்சி செயலாளர் செல்வம், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.