கும்பகோணம், மே. 13 –
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகில் கீழ்மாந்தூரில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குழியிறங்கி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீ குண்டத்தில் விழுந்து தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கீழ்மாந்தூரில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை இவ்வாண்டு இவ்விழா கடந்த 4ஆம் தேதி தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி தினமும் மண்டகப்படி நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா பத்து நாட்கள் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்று நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள்.
இன்று மாலை நடந்த தீமிதி திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். அப்போது தீமிதி போது செறுகடம்பூரைச் சேர்ந்த பூமிநாதன் என்ற பக்தர் பூக்குழியில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு அப்பகுதியில் முகாமிட்டிருந்த மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தீமிதி திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீமிதி திருவிழாவில் திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், ஆய்வாளர்கள் முத்துக்குமார் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பபணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தீமிதி திருவிழா பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெறுகிறது.