`மீசைய முறுக்கு’ படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய `நட்பே துணை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா நடித்திருக்கிறார். சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here