பழவேற்காடு, ஏப். 05 –

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில், திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மேலும் இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஆகிய பாலினத்தவர்களும் புதிய வாக்களர்கள் மற்றும் படித்தவர்கள் முதல் பாமர மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இம்முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய திமுக உறுப்பினராக தங்களை அக்கட்சில் இணைத்துக்கொள்ள அதற்குரிய அம்முகாமில் உறுப்பினர் படிவங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் அம்முகாமினைத் தொடர்ந்து முதியோர், விதவைகள் மற்றும் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் அக்கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், ஆறுமுகம், அசோகன், மாவட்ட கவுன்சிலர் தேசரணி தேசப்பன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வசேகரன், மணிபாலன், முரளிதரன், எம்.கே.தமின்ஷா, பி.எல்.சி.ரவி, சி.எம்,ரமேஷ், காசி, துராபுதீன், சேக்தாவூத், கிருஷ்ணமூர்த்தி, தூயவன் உள்ளிட்டவர்களும்,  திராளன திமுக தொண்டர்களும் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here