மயிலாடுதுறை,மே. 26 –
தம்பட்டம்செய்திகளுக்காக சந்திரசேகர்…
தமிழ் முறைப்படி, தமிழில் மந்திரங்கள் ஓதி அடியாமங்கலம் கிராமத்தில செல்வ விநாயகர் ஆலயத்தில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருநெறிய தீந்தமிழ் திருக்குட நண்ணீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது. அடியாமங்கலம் கிராமம். இங்கு பழமையான செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்திற்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குட நன்னீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்களை வைத்து தமிழில் திருநெறி திருவாசகம் தேவாரம் பாடி,யாகம் செய்யப்பட்டது. பின் வானவேடிக்கை நடைபெற, மேள தாலம் முழங்க . புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்களும், ஒதுவார்களும் தலையில், சுமந்து, ஓதுவார்கள் ,தேவாரம் திருவாசகம் தமிழில் பாட கோயில் விமானத்திற்கு கொண்டு சென்றனர். பின், தமிழில் மந்திரங்கள் ஒதி, விநாயகர் அகவல் கூறி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது இந்த தமிழில் நடைபெறும் கும்பாபிசேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்




















