பள்ளிப்பட்டு, பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நெட்டியம் காலனியில் வசிக்கும் பாலு வயது 37 மற்றும் ரஜினி வயது 39 இருவரும் நண்பர்கள் சம்பவ நாளன்று இருவரும் ரஜினியின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டிலிருந்து வீட்டுற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, எதிர்திசையில் வேகமாக வந்த அசோக்லேலாண்ட் டோஸ்டி சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் வந்த பாலு மற்றும் ரஜினி மீது மோதியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு பள்ளிபட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அதில் பாலுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், ரஜினிக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து விபத்தில் பலியான பாலு என்பவரின் மனைவி உமா வயது 30 என்பவர் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்தி தனது கணவன் மரணத்திற்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் பள்ளிப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















