திருவிடைமருதூர், டிச. 14 –
திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பாட்டனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3000 கடும் ஊனமுற்றவர்களுக்கு 5000 வழங்கிட வேண்டி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட துணை தலைவர் சுகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் 3800ம் தெலுங்கானாவில் 3016ம் உதவித்தொகை வழங்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரம் வழங்குவது நியாயமா? என்றும் எங்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய மாதாந்திர உதவித் தொகையை தமிழக அரசு உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். இதில் திருபுவனம் கிளை செயலாளர் சுபாஷ், வேப்பத்தூர் கிளை தலைவர் ராஜேந்திரன், மணலூர் கிளை பொறுப்பாளர் பாரதிதாசன் கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீவபாரதி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போன்று திருப்பனந்தாள் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சங்கத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப்பாளர்கள் பிரபாகரன், சங்கர், ஜெயக்குமார், உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை 65 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.