திருவேற்காடு, ஆக. 27
கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் பரிசோதனை மற்றும் தடுப்பு ஊசி போடும் முகாம் இன்று அயனப்பாக்கம் ராஜாங்க குப்பம், வடநும்பல் கிராமங்களில் அமைக்கப்பட்டது அதனை திமுக நகரச் செயலாளர் தொடங்கி வைத்தார்.
.சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ராஜாங்குப்பம் வடநும்பல் கிராமங்களில் கோரோனோ பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பு ஊசி போடும் முகாமை திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவேற்காடு நகர நகர கழக செயலாளர் என்.இ.கே .முர்த்தி மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே முகக் கவசங்கள் அணிந்து வெளியே செல்ல வேண்டும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க பாதுகாப்பு உப கரணங்களை பயன் படுத்தும் படியும் கூறி பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்கள்.