தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் – பழனியம்மாள் தம்பதியர்கள். அவர்களின் மகன் ஆர்.வெங்கடேஷ், அதுப்போன்று பேராவூரணி அருகே உள்ள நடுவிக்குறிச்சியில் வசிப்பவர்கள் பாதகுமார் – விஜயராணி தம்பதியினர் அவர்களின் மகள் பி.நாகஜோதி மேலும் அவ்விரு வீட்டார்களின் சம்மத த்துடன் நிச்சயிக்கப்பட்ட வெங்கடேஷ் மற்றும் நாக ஜோதியின் திருமணம் நேற்று ஞாயிற்றுக்கி.மை காலை ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
மணமகன் ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இருப்பினும் அவரதுக் குடும்பம் பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுப்பட்டு வரும் குடும்பமாகும். அதனால் மாப்பிள்ளைக்கு தன்னுடைய திருமணத்தை உழவுத்தொழிலுக்கு உதவிடும் மாடுகளை தனது திருமணத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற ஆசையை தன்னுடைய நண்பர்களிடம் அதைத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மணமகனின் நண்பர்கள் தங்களுடைய நண்பனின் விருப்பப்படி, திருமணத்தை வெகு விமர்சையாக மாடுகளை வைத்து ஊர்வலம் நடத்திட வேண்டும் என முடிவெடுத்தனர்.அதன் காரணமாக, ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரையும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற வைத்து, மாட்டு வண்டியை மணமகன் ஓட்ட, அவ்வூர்வலம் முதன்மைச்சாலையில் உள்ள சுமார் இரண்டு கி.மீ தூரத்தில், திருமண விருந்து நடைப்பெறும் தனியார் மண்டபம் வரை வந்தது. உடன் அவர்களுடன் துணை வந்த தோழர் மற்றும் தோழிகள் கிண்டலடிக்க உற்சாகப் பெடுத்தெடுத்து மணமக்கள் இருவரும் வெட்கத்துடன் மண்பம் வந்தடைந்தனர்.
மணமகனான நண்பனின் ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள், அதற்கான ஏற்பாடுகளை வெகுச் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் அத் திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பெரியோர்கள் நண்பர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அச்சிறப்பிகு ஏற்பாட்டினை வெகுவாக பாராட்டி சென்றனர்.
பொதுவாக திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும் காரிலும், மணமக்கள் ஊர்வலமாக வருவதை பார்த்திருப்போம். இது பாரம்பரிய முறையில் நடைபெற்றதை உணர்த்தும் விதமாக இருந்ததால், பேருந்துகளில் சென்ற பயணிகள், சாலையில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். மேலும், பேராவூரணியில் இவர்களுடைய திருமணம் பேசு பொருளாகியுள்ளது.





















