திருவாரூர், மார்ச். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தை சேர்ந்தோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டயளித்த பி.ஆர். பாண்டியன்- அம்மையார் ஜெய ல லிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்றுத் தந்த காவிரி ந்திநீர் உரிமையை ஸ்டாலின் அரசு கைவிட்டுக் கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு அரசு மீது குற்றம் சாட்டினார்.

பேட்டி பி.ஆர் பாண்டியன் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here