மதுரை, ஏப். 25 –
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகா, கே. வெள்ளகுளத்தில் கிராமநிருவாக அலுவலராக பணிப்புரிந்து வந்த கிருஷ்ணன் என்பவர் 2010 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாறுதலுக்காக பயனாளி ஒருவரிடம் ரூ. 2000 ஆயிரம் லஞ்சமாக கேட்டு வாங்கிவுள்ளார்.
அது தொடர்பாக மதுரை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அன்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவ்வழக்கு, மதுரை சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த ஏப் 21-2022 ஆம் தேதியன்று அவ்வழக்கு குறித்த தீர்ப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றவாளி கிருஷ்ணனுக்கு, ரு.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதற்காக ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும், அதுப்போன்று பயனாளியிடம் இருந்து லஞ்சம் வாக்கியதற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவுள்ளது. மேலும் அந்த தீர்பில் நீதிமன்றம் விதித்த இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனக்குறிப்படப்பட்டுள்ளது.