கும்போணம், எப். 30 –
மாணவியர்கள் தங்கள் திறன் மற்றும் ஆற்றலை, உயந்த நோக்கோடு பயன்படுத்தி தனது மற்றும் நாட்டின் வளர்ச்சியை உயர்த்திட வேண்டும் என கும்பகோணத்தில் நடைப்பெற்ற அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் எல்.கணேசன் உரை நிகழ்த்தினார்.
மேலும், உலக அளவில் இன்று இந்தியாவில் இருக்கும் மனித வளம், மனித சக்தியை உலக நாடுகள் பலவும் நம்மை ஆச்சரியமாக பார்க்கின்றனர், இன்றைய சமூகம் பல சாதக பாதகமான சூழல்களை கொண்டதாக உள்ளது, இன்று பட்டம் பெறும் மாணவியர்கள் அனைவரும் அதனை நன்குணர்ந்து, தங்களது திறனை, ஆற்றலை, தன் வளர்ச்சிக்காகவும், தன் குடும்ப வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் என உயர்ந்த நோக்கில் செயல்படுத்தி தானும் உயர்ந்தும், நம் நாட்டினையும் உயர்த்திட வேண்டும் என கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் எல் கணேசன் தெரிவித்தார்.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் 37வது பட்டமளிப்பு விழா (1919-20ம் கல்வி ஆண்டு) இன்று கல்லூரி முதல்வர் ரோசி தலைமையில் நடைபெற்றது, விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் எல் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேரூரையாற்றி 1105 இளங்கலை பட்டங்களையும், 322 இளங்கலை பட்டங்களையும் மாணவியர்களக்கு வழங்கி பாராட்டினார்.
இதில் வணிகவியல்துறை மாணவி தீபிகா மற்றும் புவியியல்துறை மாணவி மணிமொழி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வென்றனர் மேலும் இளங்கலையில் 11 மாணவியர்களும், முதுநிலையில் 11 மாணவியர்களும் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் எல் கணேசன் தனது சிறப்புரையில், உலக அளவில் இன்று இந்தியாவில் இருக்கும் மனித வளம், மனித சக்தியை உலக நாடுகள் பலவும் நம்மை ஆச்சரியமாக பார்க்கின்றனர், இன்றைய சமூகம் பல சாதக பாதகமான சூழல்களை கொண்டதாக உள்ளது, இன்று பட்டம் பெறும் மாணவியர்கள் அனைவரும் அதனை நன்குணர்ந்து, தங்களது திறனை, ஆற்றலை, தன் வளர்ச்சிக்காகவும், தன் குடும்ப வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் என உயர்ந்த நோக்கில் செயல்படுத்தி தானும் உயர்ந்தும், நம் நாட்டினையும் உயர்த்திட பாடுபட வேண்டும் தொடர்ந்து நம் பாரத தேசத்தின் கலை, பண்பாடு, கலச்சாரத்தை போற்றி பாதுகாத்திட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் இவ்விழாவில், கல்லூரி மாணவ மாணவியர்கள், அவர்தம் பெற்றோர் மற்றும் பேராசிரிய பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




















