மதுரவாயல், ஏப். 05 –
சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் கங்கையம்மன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 7 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருநாள் விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் இன்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள மூலவருக்கும், உற்சவருக்கும் காலை 8 மணியளவில் பல்வேறு வாசனைத் திரவியங்கள், மற்றும் பால் போன்றவைகள் கொண்டு விஷேச சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் அதனைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் தீப ஆராதனையும் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் அப்பகுதியை சார்ந்த முருகப்பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் அவ்வாலய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மேலும் அதனைத் தொடர்ந்து இன்றிரவு 7 மணியளவில் அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதிவுலா வந்து அருள் பாலித்தார்.
மேலும் இவ் வீதிவுலாவில் ஸ்ரீவள்ளிதெய்வானை சமேதமாக ஸ்ரீமுருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திருத்தேரினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் என அனைவரும் ஒன்றிணைந்து முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்தி பரவசமுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் இழுத்துச் சென்றனர்.
தங்கள் இல்லம் தேடி வந்த சுவாமிகளுக்கு தேங்காய் பழம் பூ மற்றும் பூஜைப் பொருட்கள் கொண்டு தீப ஆராதனைக் காட்டி வழிப்பட்டனர். மேலும் இந்நிகழ்வில் கங்கை அம்மன் ஆலயம் அறங்காவலர் குழுத் தலைவர் தென்றல் குமார் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் தயாளன், சரவணன் , கனகராஜ், நாரயணன், முனுசாமி, விவேகனந்தன், சேகர், சிவா, செல்வம் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.























