திருவண்ணாமலை மார்ச்.4-

திருவண்ணாமலை அடுத்த கனதம்பூண்டி ஊராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கனதம்பூண்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காசியம்மாளின் பேரனும் பி.காம் பட்டதாரி இளைஞருமான  டி.அண்ணாமலை தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இளைஞர்கள் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது நரிக்குறவ இளைஞர்கள் தங்களது இன மக்கள் வாழ்வாதாரத்திற்கு கடனுதவி வழங்க வேண்டும் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றிய கழக செயலாளர் மெய்யூர் சந்திரன் நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செ.சுபாசெல்வமணி மெய்யூர் பச்சையப்பன் கனதம்பூண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.மனோகரன் கிளை செயலாளர் கே.பன்னீர்செல்வம்  ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here