பொன்னேரி, ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் பத்துநாள் சித்திரை தேரோட்டம் விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி 28 ம் தேதி வெகுவிமர்சியாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து நேற்று ஏழாம் நாள் கரிகிருஷ்ண பெருமாளின் தேரோட்டம் நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் துவங்கிய தேரோட்டம் பொன்னேரி நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து சுமார் இரண்டு மணி அளவில் தேர்அடியை சேர்ந்தது பொன்னேரி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
அதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி ஜே கோவிந்தராஜன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன், பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி நகர கழக திமுக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனாக அன்னதானம் உள்ளிட்டவைகளை பொது மக்களுக்கு வழங்கினர்


















