சோழவந்தான், ஏப். 05 –

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நடைபெற உள்ள.17.நாள் திருவிழாவை யொட்டி கோயில் முன்பு உள்ள பீடத்தில்.  மூன்றுமாத கொடியேற்றம் விழா நேற்று இரவு நடந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை கோயில் முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க.   வைகாசி  திருவிழா கொடியேற்று  நடைபெற்று தொடர்ந்து  17 நாட்கள்   திருவிழா நடைபெறும்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு இருந்ததால் தமிழகத்தில் உள்ள   கோயில்களில்  திருவிழாக்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அரசு முழுமையாக தளர்வு அறிவித்துள்ளதால். ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில்  அர்ச்சகர். சண்கமுவேல். நேற்று மாலை 7.மணியளவில் மேளதாளத்துடன்  வைகையாற்றுக்கு சென்று பூஜைகள் செய்து பின்னர்  3 மாத கொடியை  எடுத்து   நான்கு ரதவீதியை சுற்றி வந்து திருக்கோயிலை வந்தடைந்து கோயில் முன்பாக உள்ள  பீடத்தில் மூன்றுமாத  கொடியேற்று  வைபவம்  நடைபெற்றது.  இதன்பின்னர்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை உபயதாரர் ராசு அம்பலம் காவல் குடும்பத்தினர்,   செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில்  திருக்கோயில்   செயல் அலுவலர் இளமதி. பேரூராட்சி  தலைவர்கள் சோழவந்தான் ஜெயராமன் வாடிப்பட்டி பால்பாண்டி  வார்டு உறுப்பினர்கள் கோயில் பணியாளர்கள் பூபதி கவிதா. வசந்த்.மற்றும்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமர்.இளங்கோவன்  மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here