மதுரை,  ஏப். 05 –

சோழந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில். 10 நாட்களில் 9 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு செய்த மத்திய பிஜேபி அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வலுயுறுத்தியும்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாடிபட்டி ஒன்றியக் குழு சார்பில் சோழவந்தானில் ஒன்றியச் செயலாளர்  A.வேல்பாண்டி தலைமையில் வட்டபிள்ளையார் கோவில் அருகே சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் டூவீலரை தள்ளூ வண்யிடில் ஏற்றி கண்டன முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கந்தவேல் பி. பொன்ராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here