பாபநாசம், மே. 11 –

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி துணை கிளை அலுவலகத்தில், முகவர்கள் சிறப்புக் கூட்டம் கும்பகோணம் கிளை 1 – ன் மேலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் பாபநாசம் துணைக்கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற தஞ்சை கோட்ட வணிக மேலாளர் சுராஜ்குமார், எல்.ஐ.சி யின் புதிய திட்டங்கள் குறித்து முகவர்களுக்கு விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, விற்பனை மேலாளர் குமரன், கும்பகோணம் உதவி கிளை மேலாளர் ஜோஸ் பிரிட்டோ, வளர்ச்சி அதிகாரிகள் பழனிச்சாமி, ஸ்ரீ சங்கரி, உதவி நிர்வாக அதிகாரி ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் முன்னணி முகவர்கள் ரகுபதி, அனிதா, சசிகலா, பெருமாள் சாமி, திருமுருகன், வெங்கடேசன், சந்திராஜ் ஆகியோர் சிறப்பாக வணிகம் புரிந்ததற்காக அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், பாராட்டியும், சிறப்பு விருந்தினாரல் கௌரவிக்கப்பட்டனர்.  இக்கூட்டத்தில் அனைத்து முகவர்களும் தவறாது வந்திருந்து இக்கூட்டத்தினை சிறப்படைய செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here