பொன்னேரி, ஏப். 02 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீதேவி கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்த மக்கள் நலப்பணி இயக்கம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏகலைவன் அரசுப்பணி போட்டி பயிற்சி மையம் துவக்க விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மக்கள் நலப்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீதேவி கலைக் கல்லூரியின் தாளாளர் ரமேஷ். பொன்னேரி நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் .மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் ஒரு மனிதனின் உயர்வுக்கு இன்னொரு மனிதன்தான் உதவி செய்வான். அதுபோன்று நீங்கள் கற்கின்ற கல்வி மட்டுமின்றி உங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த பயிற்சி வகுப்புகள் உங்களின் வாழ்வில் பெரும் முக்கியத்துவத்தை வகுக்கும் என்பதில் ஐயமில்லை,
இது போன்ற வகுப்புகள் நான் படிக்கும் நேரங்களில் இருந்திருந்தால் இன்னுமும் பெருவகையான அரசுப்பணிகளில் நான் அமர்ந்திருப்பேன் என்றும். மாணவர்கள் இதனை பயன்படுத்தி முன்னேறி செல்ல இந்த வகுப்பை பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். இந்நிகழ்வில் அபுபக்கர் சித்திக், உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.





















