கும்மிடிப்பூண்டி, ஏப். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருயிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வெண்ணிற அம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் படைசூழ கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ரெட்டம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வெண்ணி அம்மன் ஆலய திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 18 தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லக்ஷ்மி ஹோமம், கிராம தேவதா பூஜை கோபூஜை அஷ்டபந்தனம் சாற்றுதல் பூஜை நடந்தேறியது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீ வெண்ணி அம்மன் சுவாமிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷனம் கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, மஹா சங்கல்பம், முதற்கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் விசேஷ சந்தி, சகல பரிவார தேவதா ஆவாஹனம், சோம பூஜை, பாலிகா பூஜை, துவார பூஜை, மஹா பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், ராக தாள உபச்சாரம், திராவிட வேதம், மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் மற்றும் நாடி சந்தனத்துடன் ஸ்பர்ஸா ஹுதி, இரண்டாம் கால யாக சாலை பூஜை, விசேஷ பூஜை, விசேஷ ஹோமம், சகல சூக்த ஹோமம் மூல மந்தர தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து  பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து ராஜகோபுரம் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

மேலும் பிற்பகல் 1000 க்கும் மேற்பட்ட பேருக்கு அன்னதானமும்,  அருள்மிகு ஸ்ரீ வெண்ணி அம்மன் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவும் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில்  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் முரளி, இன்னாள் தலைவர் எல்லம்மள் சங்கர், தொழிலதிபர் ரெட்டம்பேடு செந்தில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி செயலர் குருமூர்த்தி, எம்எல்ஏ உதவியாளர் ஜெயகோபி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபி, அதிமுக மணி கிராம பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சிறப்பாக முன்னின்று கும்பாபிஷேக நிகழ்வினை நடத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here