அம்மையார்குப்பம், ஜன. 18 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கத்தில் இன்று காலை 11.00 மணியளவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற கூடத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள் வையபுரி, முருகப்பா, S.R. செங்குட்டுவன் (பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ) A.p. சண்முகம் வார்டன், விநாயகம், மாசிலமணி, கே ஜி பார்த்திபன், A.G.சிவானந்தம், A. மணிமாறன் K.G.கணேசன், எஸ்.கே நீலகண்டன், வி.கோ மோகன் அண்ணாதுரை, கஜபதி, டி.எம்.தட்சிணாமூர்த்தி, ரவிக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு தரப்பினர் சுவாமி விவேகானந்தர் புகழையும், ஆன்மீக போதனைகளையும், இளைஞர்கள் மத்தியில் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு எழுச்சி, மற்றும் அவரின் சிறப்புகளையும் எடுத்துரைத்துரைத்தனர்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் எழுது பொருட்கள் மற்றும் இனிப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளனமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினர் கலந்துக்கொண்டனர்.


















