கும்பகோணம், அக்.5 –
கும்பகோணத்தில் இன்று தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட செய்தி ஒலிபரப்புத் துறையின் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள இத்தருணத்தில், மழை நீரை சேகரித்து சேமிக்க இது சரியான தருணம் என்பதால், மழை நீரை வீணாக்காமல், அனைத்து தரப்பினரும் தங்களது பகுதியில் அங்காங்கே, மழை நீரை உரிய முறையில் சேமித்து, நிலத்தடி நீர் மட்டம் உயர உதவிடவும், தட்டுப்பாடு இன்றி நீர் கிடைத்திட வேண்டும். என்ற உயரிய நோக்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பயணியர் தங்கும் விடுதி மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் முன்னிலையில், தமிழக அரசின், தலைமை கொறடா கோவி செழியன், மழைநீர் சேமிப்பை, அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான ஒளிப்படக்காட்சி வழி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மழை தூரலுடன், பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் சுகந்தி, நகராட்சி ஆணையர், நவந்திரன் நிர்வாக பொறியாளர் லோகநாதன் உதவி பொறியாளர் ராஜா பரத் நிலத்தடி நீர் ஆய்வாளர் அருள் அமுதன் உட்பட பலர் பங்கேற்றனர்.