கும்பகோணம், மார்ச். 05 –

கும்பகோணம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அவ்வயக்காட்டில் மாடு மேய்ந்தால் மாட்டின் காலை வெட்டி கொடூரச் செயலில் ஈடுப்பட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

   

  கும்பகோணம் அருகே  உள்ள பிளாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பரமசிவம் . இவருக்கு,  சொந்தமாக 5 மாடுகள் உள்ளன. தினமும் மதியம் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவதும் பின் மேய்ச்சலுக்குப் பின் மாடு தானாகவே  மாடு மேய்ச்சல் முடிந்ததும், மாலை வீட்டுக்குத் வந்துவிடுவதும் வழக்கம்.   

  இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மதியம் 5 மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார்  பரமசிவம். வழக்கம் போல் வீடு வந்து சேர வேண்டிய ஐந்து மாடுகளில் நான்கு மட்டும் திரும்பி வந்துள்ளது.  ஒரு மாடு மட்டும் வெகு நேரமாகி வீட்டுக்கு வரவில்லை என்பதால் மாட்டைத் தேடி கொண்டு சென்ற போது,  பழவத்தான்கட்டளை திமுக ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகருக்கு சொந்தமான அறுவடை செய்யும் வயல் இலுப்பைத் தோப்பு பகுதியில் உள்ளது. 

 அந்த வயலில் காலில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்த மாட்டை கண்டு அதிர்ச்சி அடைந்த பரமசிவம் அருகில் இருந்தவர்களிடம் கேட்ட போது திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான வாழை மரத்திலுள்ள வாழை இலையை பசுமாடு தின்றதால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர் பசு மாட்டின் காலை வெட்டியதால் மாட்டிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கு என்று தெரிவித்து உள்ளனர்.

 இதனால் மாடு எழ முடியாமல் மயங்கி இருந்தது. இந்நிலையில் உடனே கால்நடை மருத்துவரை வரவழைத்து மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அதிகமாக உள்ளதால் மாட்டினால் எழுந்து நடக்க முடியாதால் அங்கேயே தற்காலிகமாக ஒரு பந்தல் அமைத்து மாட்டை பராமரித்து வருகின்றனர்.

  இதுக்குறித்து மாட்டின் உரிமையாளர் பரமசிவம் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாட்டின் காலை வெட்டிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here