சாக்கோட்டை, டிச. 22 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்குபயிற்சி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உழவர் விவாத குழு அமைப்பாளர் தலைவர் ராம தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
அப்பயிற்சியின் போது அவர் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றியும், நெற்பயிரில் உர மேலாண்மை பற்றியும், நெல் வயலில் துத்தநாக சல்பேடின் முக்கியத்துவம் பற்றியும், தஞ்சையில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி குறித்தும், விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
மேலும் இப்பயிற்சியில் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் சுதா ரோஸ் உரை நிகழ்த்தும் போது, கால்நடைகளுக்கு ஏற்படும் அம்மை நோயினை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், கால்நடைகளுக்கு காப்பீடு செய்வது பற்றியும், மேலும் கால்நடைகளுக்கு முன் எச்சரிக்கையாக தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து இப்பயிற்சியில் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் பிரியமாலினி பருத்தி மட்டும் தானியங்கள் கொள்முதல் பற்றி உழவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
கும்பகோணம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் உரை நிகழ்த்தும் போது, சோயா மற்றும் உளுந்து சாகுபடி குறித்து எடுத்துரைத்தார்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன் பஞ்சகாவியா, தசகாவியா, தேமோர் கரைசல், அரப்பு மோர் கரைசல் ,சீயக்காய் மோர் கரைசல், அமுத கரைசல் இது போன்ற கரைசல்களை தயாரிக்கும் முறை பற்றி எடுத்துரைத்தார். மேலும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.






















